சிவகங்கையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகங்கையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தை கண்டித்து சிவகங்கையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை,

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உள்பட 40 வீரர்கள் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிவகங்கையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை பஸ்நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. நகர் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் துணை ராணுவ வீரர்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் தலைவன் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாத அமைப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொது செயலாளர்கள் சுப சண்முகம், செல்வராஜ், செயலாளர் உதயா, நகர் துணை தலைவர் பிரபாகரன், நகர் பொது செயலாளர்கள் மனோகரன், சேகர் செயலாளர் கவுதமன், கலாசார பிரிவு தலைவர் துரைராஜ், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், வக்கீல் பிரிவு ராஜயோகன், மகளிரணி துணை தலைவர் சாந்தி, செயலாளர் ஷோபனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story