புளியரையில் தீக்குளித்த கர்ப்பிணி சாவு
புளியரையில் தீக்குளித்த கர்ப்பிணி நேற்று பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
புளியரையில் தீக்குளித்த கர்ப்பிணி நேற்று பரிதாபமாக இறந்தார்.
தீக்குளிப்பு
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 26). இவருக்கும், செங்கோட்டை அருகே உள்ள புளியரை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
மகாலட்சுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வீட்டை பூட்டிக் கொண்டு, மகாலட்சுமி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மகாலட்சுமி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் வயிற்றில் இருந்த சிசு இறந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுத்தனர்.
பெண் சாவு
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story