சர்வாதிகாரி போல நடந்து கொள்வதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம்
சர்வாதிகாரி போல நடந்து கொள்வதா என கவர்னருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
கவர்னர் கிரண்பெடியை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் போராட்ட களத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் போராட்டகளத்தில் போராளியாக இருக்கும் முதல்-அமைச்சர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது. பா.ஜ.க. இந்தியா முழுவதும் எதிர்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி ஆட்சி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கவர்னர் கிரண்பெடி புதுவையில் போட்டி ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் கவர்னரின் ஆட்சிக்கு தமிழக அரசு அடிபணிந்து போகிறது. ஆனால், புதுவை அரசு கவர்னரை எதிர்த்து நிற்கிறது.
மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடக்கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு. கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மாநிலங்களுக்கு கவர்னர் வேண்டாம் என்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கருத்து. கவர்னர் என்பவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெற்றுத்தர வேண்டும். மக்களுக்கு அரசு செய்யும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி சர்வாதிகாரி போல நடந்துகொள்கிறார். இது கண்டிக்கத் தக்கது.
சட்டம்-ஒழுங்கை கவனித்துக்கொள்ள சட்டத்துறை, காவல்துறை போன்றவை உள்ளன. ஆனால் ஹெல்மெட் அணியாதவர்களை சாலையில் இறங்கி மிரட்டுவது கவர்னரின் வேலை அல்ல. நரேந்திரமோடி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு, நீதி ஆகியவை சீர்கெட்டுள்ளது. சி.பி.ஐ.க்கே ஒரு சி.பி.ஐ. போட வேண்டிய நிலை மோடி அரசில் உள்ளது.
மோடியின் கார்பன் காப்பியாக கவர்னர் கிரண்பெடி உள்ளார். வேண்டுமென்றே இப்படி ஒரு கவர்னராக நியமித்து அரசுக்கு மோடி பிரச்சினையை ஏற்படுத்தி வருகி றார். இது நல்லதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தும் அளவுக்கு நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை உள்ளது. புதுவை அரசின் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல், திட்டங்களை செயல்படுத்த விடாமல் மக்களுக்கு எதிரான காரியங்களை கவர்னர் கிரண்பெடி செய்து வருவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? என யோசிக்க வைக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழலில், துணை ராணுவத்தினை அனுப்பி மிரட்டும் சூழ்நிலையை கவர்னர் மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் உள்ள கவர்னரை ஜனாதிபதி உடனடியாக திரும்ப பெற வேண்டும். கவர்னராக இருக்கும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை. எனவே வேறு நிர்வாகியை புதுவைக்கு நியமிக்க வேண்டும். இல்லையென்றால் புதுவை மக்களுடன், தமிழக மக்களும் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story