பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் எடியூரப்பா பேச்சு


பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2019 4:00 AM IST (Updated: 18 Feb 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பெங்களூருவில்நடந்த போராட்டத்தில்எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா தர்ணா போராட்டம்

காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி நடந்த தற்கொலை படை தாக்குதலில் துணை ராணுவப்படையை சேர்ந்த 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்தும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூருவில் உள்ள மவுரியா சர்க்கிளில் கர்நாடக பா.ஜனதா சார்பில் நேற்று காலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. போராட்டத்தில் எம்.பி.க்கள் பி.சி.மோகன், ஷோபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜனதாவினர் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வாசங்கள் அடங்கிய பதாதைகளை கையில் வைத்திருந்தனர். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் எடியூரப்பா பேசியதாவது:-

தக்க பதிலடி கொடுப்பார்கள்

காஷ்மீரில் துணை ராணுவப்படை வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. மண்டியாவை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் குரு வீரமரணம் அடைந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். குருவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நானும் ஆறுதல் கூறினேன். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்திலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படுவது உறுதி. பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். அதற்காக நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story