துணை ராணுவ வீரர்கள் வீரமரணம்: அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அமைதி பேரணி


துணை ராணுவ வீரர்கள் வீரமரணம்: அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அமைதி பேரணி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:15 PM GMT (Updated: 18 Feb 2019 8:26 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக வாசுதேவநல்லூரில் அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் சார்பில், அமைதி பேரணி நடைபெற்றது. மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மூர்த்தி பாண்டியன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமிவேல், பேரூர் செயலாளர் குமரேசன், தி.மு.க. செயலாளர் சரவணன், இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் போஸ்ராஜா, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சுப்பையா, இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், புதிய தமிழகம் கட்சி உமர்கத்தா, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், சுமங்கலி சமுத்திரவேலு, திருவள்ளுவர் கழக பொறுப்பாளர்கள் மாரியப்பன், கணேசன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து ராயகிரி பேரூர் கழக செயலாளர் கந்தராஜ், துணை செயலாளர் சேவகபாண்டியன், மகாத்மா காந்தி சேவாசங்கம் குலாம்ஷா ஆகியோர் ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் இமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிந்தவுடன் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story