முழுஅடைப்பு போராட்டம்: கேரள-தமிழக எல்லையில் பஸ்கள் ஓடவில்லை பயணிகள் அவதி
கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி கேரள-தமிழக எல்லையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் இருமாநில பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
செங்கோட்டை,
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரியகளியட்டா பகுதியை சேர்ந்தவர் கிரிபேஸ் (வயது 19). இவர் அதே பகுதியில் இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்து வந்தார். அதேபோல் சரத்லால் (28) என்பவர் இளைஞர் காங்கிரஸ் கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கேரளாவில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.
கேரள-தமிழக எல்லையோரமான செங்கோட்டைக்கு கேரளாவில் இருந்து வந்து செல்லும் 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் நேற்று வரவில்லை. ஒரு சில பஸ்கள் மட்டுமே வந்து சென்றன.
இதேபோல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் செல்லவில்லை. குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிலர் ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். இதனால் இரு மாநில பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story