போதைப்பொருள் வாங்க தாயின் நகைகளை திருடிய வாலிபர் ரெயில்வே போலீசாரிடம் சிக்கினார்
போதைப்பொருள் வாங்க தாயின் நகைகளை திருடிய வாலிபர் ரெயில்வே போலீசாரிடம் சிக்கினார்.
மும்பை,
மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக்கொண்டு இருந்தார். ரெயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சித்தார்த் வாக்மாரே(வயது22) என்பதும், அவர் டிக்கெட் இல்லாமல் ரெயில்நிலையத்தில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை போட்டனர். அப்போது அவரிடம் இருந்து தாலி சங்கிலி, தங்க வளையல்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போதை பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் வீட்டில் இருந்து தனது தாயின் நகைகளை திருடி உள்ளார். பின்னர் அதில் ஒரு பகுதியை விற்று போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்திவிட்டு ரெயில்நிலையத்தில் சுற்றியபோது போலீசாாிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
ஆலோசனை வழங்கினர்
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வாலிபரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நகையை திருடியது தொடர்பாக மகன் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே ரெயில்வே போலீசார் டிக்கெட் இன்றி பயணம் செய்தல், அத்துமீறி நுழைதல், குப்பையை போட்டது போன்ற காரணங்களுக்காக வாலிபரிடம் ரூ.700 அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினா்.
மேலும் வாலிபரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story