தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை


தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 19 Feb 2019 4:45 AM IST (Updated: 19 Feb 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தென்காசி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்தப் பட்டியலில் வசதி படைத்தவர்கள் இருப்பதாகவும், இதனை ரத்து செய்துவிட்டு உண்மையான ஏழை எளிய பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அங்கு உதவி கலெக்டர் இல்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.

அதன்பிறகு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹென்றி பீட்டர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார் சி.பி.ஐ. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கணேசன், சி.பி.எம். தாலுகா செயலாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், துணைச் செயலாளர் சித்திக், ஒன்றிய செயலாளர் பிரபாகர், நில உரிமை மாநில துணைச்செயலாளர் துரை அரசு, நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story