திருப்பூரில் பனியன் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
திருப்பூரில் தனியார் பனியன் நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
திருப்பூர்,
திருப்பூரில் உள்நாட்டு பனியன் ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடைகள் திருப்பூர் காமராஜர் ரோடு மற்றும் முனிசிபல் ரோட்டில் உள்ளன. இந்த தனியார் நிறுவனத்துக்கு கீழ் உள்ள பனியன் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகளில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் வெங்கடேஷ்வரா நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று காலை வழக்கம் போல் இந்த அலுவலகத்தில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 3 கார்களில் கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்குள் புகுந்தனர். பின்னர் அடுக்குமாடிகள் கொண்ட அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு தளமாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். வருமான வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
பரபரப்பு
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிளை நிறுவனங் களின் வரவு-செலவு கணக் குகள் உள்ளிட்டவற்றை 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது அலுவலகத்துக்கு உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் வெளியில் இருந்த நபர்கள் யாரும் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முடியவில்லை.
தனியார் நிறுவனத்தில் இருந்த ஊழியர்களையும் வெளியில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த அலுவலகத்துக்கு வெளியே இருந்த காவலாளிகள், ‘அலுவலகத்தில் சோதனை நடப்பதால் உள்ளே செல்ல முடியாது’ என்று கூறி அந்த அலுவலகத்துக்கு நேற்று வந்தவர்களை அப்படியே திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story