2009-ல் அரசு கடன் பெற்றதற்கான பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை பட்டுவாடா நிதித்துறை செயலாளர் தகவல்
2009-ம் ஆண்டில் புதுவை அரசு கடன் பெற்றதற்கான பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு முதிர்வு தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று நிதித்துறை செயலாளர் கந்தவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை அரசு நிதித்துறை செயலாளர் கந்தவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு மாநில வளர்ச்சிக்காக நிதித்துறை சார்பில் கடந்த 13.5.2009 அன்று பெற்ற கடன் தொகை ரூ.247 கோடியே 48 லட்சத்திற்கு பிணைய பத்திரம் வைத்திருப்போருக்கு வருகிற 18.3.2019 அன்று திருப்பி செலுத்தப்படும். பணக்கொடுப்பாணை அல்லது மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் உரிய தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
பிணைய பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் மற்றும் அதன் உபகிளைகள், அரசு கருவூலங்கள் இவற்றில் எங்கு வட்டி பெற்று வருகின்றனரோ அங்கு ஏற்கனவே வட்டி பெறுவதற்கு அளித்து வரும் விவரங்களை சமர்ப்பித்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
வங்கி கணக்கு விவரங்கள் இல்லாத பட்சத்தில் பிணைய பத்திரதாரர்கள் ரிசர்வ் வங்கியின் பொது கடன் பிரிவு அலுவலகத்தில் பிணைய பத்திரங்களை முதிர்வு தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வு தொகையை முன்பு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அல்லது வேறு இடங்களில் பெற விரும்புவோர் பிணைய பத்திரங்களின் பின்புறம் அசலைப் பெற்றுக்கொண்டதாக சான்றித்து அவற்றை ரிசர்வ் வங்கியின் பொதுக்கடன் பிரிவிற்கு காப்புறுதி செய்யப்பட்ட பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் அரசு கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் அல்லது உப வங்கிகளின் கிளைகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story