கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் சப்போட்டா பழங்கள் பறிமுதல்


கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் சப்போட்டா பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:30 AM IST (Updated: 20 Feb 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் சப்போட்டா பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு கோயம்பேடு பழ மார்க்கெட்டில் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பழங்களை விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்று கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சிலர் ரசாயன கற்கள் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழ மார்க்கெட்டில் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 கடைகளில் ரசாயன கற்கள் வைத்து சப்போட்டா பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 3 டன் சப்போட்டா பழங்கள் மற்றும் 9 கிலோ ரசாயன கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story