அதிகாரத்துக்காக பா.ஜனதாவுடன் கூட்டணி: சொந்த கட்சி தொண்டர்களையே ஏமாற்றிய உத்தவ் தாக்கரே அசோக் சவான் தாக்கு
அதிகாரத்துக்காக பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து சொந்த கட்சி தொண்டர்களையே உத்தவ் தாக்கரே ஏமாற்றி விட்டார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறினார்.
மும்பை,
நாடாளுமன்றம் மற்றும் மராட்டிய சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா மற்றும் சிவசேனா நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சட்டசபை தேர்தலின் போது இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் களமிறங்க முடிவு செய்து உள்ளன.
பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்த்து உள்ள சிவசேனாவை மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கடுமையாக சாடி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் அமித் ஷாவை உத்தவ் தாக்கரே ‘அப்சல் கான்' என்று அழைத் தார். உத்தவ் தாக்கரேயை அமித் ஷா ‘எலி' என்று கூறினார். ஆனால் இன்று இருவரும் ஒன்றாக அமர்ந்து கூட்டணியை அறிவிக்கிறார்கள்.
கடந்த மும்பை மாநகராட்சி தேர்தலின் போது, உத்தவ் தாக்கரே பா.ஜனதா ஊழல் மந்திரிகளின் கையேட்டை வெளியிட்டார். தற்போது அந்த கையேட்டில் உள்ள காகிதங்களை கிழித்து அதில் மலர்களை செய்து அமித் ஷாவை வரவேற்கிறார்.
பா.ஜனதாவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று சொன்னது எல்லாம் உத்தவ் தாக்கரேயின் வெற்று பேச்சு. அதிகாரத்துக்காக தனது சொந்த கட்சியினருக்கே அவர் துரோகம் இழைத்து விட்டார். சொந்த கட்சியாலேயே ஏமாற்றப்பட்ட சிவசேனா தொண்டர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் மோடி அரசை அகற்றுவதற்கு அவர்கள் (சிவசேனா தொண்டர்கள்) காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story