காரைக்காலில் குண்டும், குழியுமான காமராஜர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
காரைக்காலில் குண்டும், குழியுமான காமராஜர் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட நகர் பகுதியில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, காமராஜர் சாலை, புளியங்கோட்டை சாலை ஆகிய சாலைகள் பிரதான சாலைகளாகவும், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளாகவும் விளங்குகின்றன. இவற்றில் காமராஜர் சாலையும், புளியங்கொட்டை சாலையும் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன.
மேற்கண்ட சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது விபத்துக்கு உள்ளாகிறார்கள். காமராஜர் சாலை, புளியங்கோட்டை சாலை வழியாகதான் காரைக்கால்-நாகப்பட்டினம், காரைக்கால்-சீர்காழி, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை, காரைக்கால்- மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள், கனரக வாகனங்கள், வேன், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. எனவே குண்டும், குழியுமான காமராஜர் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story