வானவில் : பெரிய என்ஜினுடன் அடுத்த தலைமுறை ஹோண்டா ஆப்பிரிக்கா


வானவில் : பெரிய என்ஜினுடன் அடுத்த தலைமுறை ஹோண்டா ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 20 Feb 2019 3:04 PM IST (Updated: 20 Feb 2019 3:04 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற மோட்டார் சைக்கிளை உருவாக்குவதில் தனித்துவமாய் திகழும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா ஆப்பிரிக்கா மாடல் மோட்டார் சைக்கிளில் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது முந்தைய மாடலை விட பெரிய என்ஜினைக் கொண்டதாக உள்ளது. சாகசப் பிரியர்கள் பெரிதும் விரும்பும் இந்தமாடல் முதன் முதலில் 1988-ம் ஆண்டு எக்ஸ்.ஆர்.வி. 650 என்ற பெயரில் அறிமுகமானது. இதைஅடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் எக்ஸ்.ஆர்.வி. 750 மாடல் அறிமுகமானது. தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிரிக்கா ட்வின் மாடல் மோட்டார் சைக்கிள் 2016-ம் ஆண்டில் அறிமுகமானது. அனேகமாக இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள சி.ஆர்.எப்.1000 எல் மாடல் ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார் சைக்கிள் என்ஜின் சற்று பெரியதாகும். இது ஐரோப்பிய புகைவிதி 5-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

இது 1,080 சி.சி. திறன் கொண்டது. இரட்டை என்ஜினுடன் 94 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,000 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 20 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இதன் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12.90 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

Next Story