வானவில் : விரைவில் அறிமுகமாகிறது பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர்.


வானவில் : விரைவில் அறிமுகமாகிறது பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர்.
x
தினத்தந்தி 20 Feb 2019 9:44 AM GMT (Updated: 20 Feb 2019 9:44 AM GMT)

பி .எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மோட்டார் சைக்கிள் எஸ். 1000 ஆர்.ஆர். மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது விரைவிலேயே இந்திய சாலைகளில் சீறிப் பாய உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் குறைந்த எடை அதிக திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

999 சி.சி. திறன் கொண்ட இது 13,500 ஆர்.பி.எம். வேகத்தில் 207 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். அதேபோல 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் 113 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலை விட இதில் 8 ஹெச்.பி. திறன் அதிகமாகும்.

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஷிப்ட் காம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது 6 கியர்களைக் கொண்டது. அத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டது. நான்கு வகையான ஓட்டும் நிலைகள் (சாலை, மழை, டைனமிக், ரேஸ்) ஆகியன இதில் உள்ளன.

முன்பகுதியில் 6.5 அங்குல திரை உள்ளது. முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவு. அதாவது இது 197 கிலோ எடை கொண்டது. இதன் விலை ரூ. 20 லட்சத்துக்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Next Story