வானவில் : சோனி புளூடூத் ஸ்பீக்கர்
எலெக்ட்ரானிக் பொருள்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள சோனி நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
சோனி எக்ஸ்.பி.01 என்ற பெயரில் இது கையடக்கமாக கண்ணைக் கவரும் வண்ணங்களில் வந்துள்ளது. வீடுகளில் நடக்கும் சிறிய நிகழ்ச்சிகளில் இசை மழையை பரவச் செய்ய இத்தகைய ஸ்பீக்கர்கள் நிச்சயம் உதவும். 6 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். பிளேபேக் வசதியும் உள்ளது. கையில் எடுத்துச் செல்லும் வகையில் வண்ணத்தில் ஸ்டிராப் உள்ளது. இதில் பில்ட் இன் மைக் இருப்பதால் இதை அழைப்பானாகவும் பயன்படுத்த முடியும். கண்ணைக் கவரும் கருப்பு, கிரே, பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய 6 வண்ணங்களில் இது வெளி வந்துள்ளது. நீர் புகா தன்மை கொண்டது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை சுமார் ரூ.1,700 ஆகும்.
Related Tags :
Next Story