வானவில் : சூரிய ரேடியோ
சூரிய மின்னாற்றலில் செயல்படும் அவசர கால விளக்கு இது. இதில் ஏ.எம்., எப்.எம். வானொலியும் உள்ளது.
1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளதால் இதிலிருந்து உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவற்றை யு.எஸ்.பி. மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது வானொலி மிகச் சிறந்த பொழுது போக்காக உதவும். இதில் ஒரு வாட் எல்.இ.டி. விளக்கு இருப்பதால் மின்சாரம் தடைபட்டால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல இது சூரிய மின்னாற்றலில் சார்ஜ் செய்து கொள்ளும். அவசர காலத்தில் இதில் உள்ள குமிழியை சுழற்றுவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும்.
இதனால் பேட்டரி தீர்ந்துபோனாலும் கையினால் சுழற்றி சார்ஜ் ஏற்ற முடியும். இதன் விலை 20 டாலர் (ரூ. 1,480). ரன்னிங் ஸ்னெய்ர்ல் என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் இணையதளம் இதை இறக்குமதி செய்து விற்கிறது.
Related Tags :
Next Story