வானவில் : நீராவி அயர்ன் பாக்ஸ்


வானவில் : நீராவி அயர்ன் பாக்ஸ்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:59 PM IST (Updated: 20 Feb 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

மின்சார பொருள்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ரைகோ நிறுவனம் எளிதில் கையாளக்கூடிய நீராவி அயர்ன் பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது.

இதன் கீழ் பகுதி எளிதில் ஒட்டாத தன்மையுடையது. இதனால் துணிகள் ஒட்டாது. அதிக வெப்பத்தில் நீராவி வெளியாவதால் துணிகளில் உள்ள பாக்டீரியா, கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடும். துணிகளை அயர்ன் செய்வதற்கு சமதளம் அதாவது மேஜை அவசியமில்லை. துணிகளை ஆங்கரில் இருந்தபடியே அயர்ன் செய்யலாம்.

நீராவி வெளியேறுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் எளிதில் நீங்கும். பட்டு துணிகள் உள்ளிட்டவற்றை அயர்ன் செய்ய மிகவும் ஏற்றது. இதன் வெளிப்புறம் ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. 800 வாட் திறன் கொண்டது. கீழ் பகுதி நான் ஸ்டிக் எனப்படும் ஒட்டாத தன்மை கொண்டது. அதிக சூடேறினால் தானாக ஆப் ஆகும் வசதி கொண்டது. ஓராண்டு உத்தரவாதத்துடன் வந்துள்ள இதன் விலை ரூ.1,910.

Next Story