வானவில் : சூரிய விளக்கு
இப்போது மரபு சாரா எரிசக்தி மீதான ஈர்ப்பு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
உண்மையிலேயே வீடுகளுக்கு அவசியமான அல்லது வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் உபயோகமான விளக்குதான் சிம்சுன் எட்ஜ் நிறுவனம் உருவாக்கியுள்ள லுமினெய்ட் பேக் லைட். இது சூரிய ஒளியில் மின்னாற்றலை பேட்டரியில் சேமித்து வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது. தேவைப்படும் சமயத்தில் விளக்கை எரிய வைத்துக்கொள்ளலாம். இது எடை குறைவானது. பொதுவாக லாந்தர் விளக்கு போன்றவை இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆனால் இது சிறிய சதுர வடிவில் மடக்கி வைக்கும் வசதி கொண்டது.
வெளியூர் பயணம் மேற்கொள்வோர் குறிப்பாக மலையேற்றம், காடுகளில் தங்கி ஆய்வு நடத்துவோருக்கு ஏற்றது. அது தவிர அவசர காலத்திலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரி மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் இந்த விளக்கு தொடர்ந்து 10 மணி நேரம் இயங்கும். சூரிய ஆற்றலில் மின்சாரத்தை சேமிப்பதால் இதை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
விளக்கின் வெளிச்சத்தை 5 வெவ்வேறு நிலைகளில் கட்டுப்படுத்த முடியும். 75 சதுர அடி பரப்பளவு வரை இதன் ஒளி பிரகாசம் தெரியும். இதற்கு ஓராண்டு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.1,499.
Related Tags :
Next Story