மாவட்ட செய்திகள்

வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம் + "||" + Vanavil : Protect the device from insect bites

வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்

வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்
கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.
பைட் ஹெல்பர் என்னும் இந்த சாதனம் இந்த தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கும். சிறிய சைஸ் பேனாவை போலிருக்கும் இது பூச்சிக்கடியால் ஏற்படும் நமைச்சலை போக்கி நோய்க் கிருமிகள் ஏதும் பரவாமல் காக்கிறது.

‘தெர்மோ பல்ஸ்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. இதில் இருக்கும் மெட்டல் முனையை பூச்சி கடித்த இடத்தில் வைத்தால் போதும். அம்முனையிலிருந்து வெளிவரும் வெப்பம் மற்றும் அதிர்வலைகள் பாதிக்கப்பட்ட இடத்தை நடுநிலைப்படுத்தி ( NEUTRALIZE ) ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.சில நொடிகளிலேயே அரிப்பு நின்று விடுகிறது.

பூச்சிக்கொல்லிகளும், ஸ்ப்ரேக்களும் இருந்தாலும் அவை கேடு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளதால் அவற்றை உபயோகிப்பது நல்லதல்ல. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த பைட் ஹெல்பர் சாதனம் வரவேற்கத்தக்கது. ஐந்து வயது குழந்தையிலிருந்து பெரியவர் வரை எல்லா வயதினரும் இதை உபயோகிக்கலாம். இக்கருவி பேட்டரியில் இயங்கக்கூடியது. இதன் விலை ரூ.1,420.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : சென்னையில் விற்பனையை தொடங்கியது ‘ஏதெர்’
பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்கூட்டர் விற்பனையை சென்னையில் தொடங்கியுள்ளது.
2. வானவில் : பியாஜியோவின் ‘அப்ரிலியா ஸ்டோர்ம்’
பியாஜியோ குழுமத்தின் பிரபல பிராண்டுகளில் அப்ரிலியா ஒன்றாகும். இந்தப் பெயரில் ஸ்கூட்டர்கள் மோட்டார் சைக்கிள்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
3. வானவில் : டி.வி.எஸ். அபாச்சே ஆர்.ஆர் 310 அறிமுகம்
டி.வி.எஸ். நிறுவனம் தனது பிரபல மாடலான அபாச்சேயில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
4. வானவில் : ஹோண்டா ஆக்டிவா 5 ஜி ஸ்பெஷல் எடிஷன்
ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆக்டிவா. இந்த மாடலில் இரண்டு புதிய வண்ணங்களைக் கொண்ட ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
5. வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்... மங்காத்தா படத்தில் அஜித் ஓட்டிய பைக்
கார் மற்றும் பைக் பந்தயங்களில் தல அஜித்குமாருக்கு அலாதி பிரியம் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்று.