மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இன்று திருவாரூரில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் பங்கேற்பு
திருவாரூரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
திருவாரூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2–ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தொண்டர்கள் முன்னிலையில் தலைவர் கமலஹாசன் கட்சி கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து புறப்பட்டு நாகைக்கு வருகிறா£ர். மாலை 3 மணிக்கு வேதாரண்யம் தொகுதி, வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவ மக்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்குகிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
அவரை வரவேற்று ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் ஞானசம்மந்தம், சுரேந்திரன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஆர்த்தி ஸ்டாலின் உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story