மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தில் பெண், அரிவாளால் வெட்டிக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + The girl in the past, With sickle Police brigade for Vettikkalai Rowdy

முன்விரோதத்தில் பெண், அரிவாளால் வெட்டிக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு

முன்விரோதத்தில் பெண், அரிவாளால் வெட்டிக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வேளாங்கண்ணி,

நாகைமாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டுகுமார் என்கிற கணேஷ்குமார்(வயது29). அதேபகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்தவேலன்(30). இவரது மனைவி சரண்யா(28). இந்தநிலையில் கணேஷ்குமாருக்கும், ஆனந்தவேலனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யாவை கணேஷ்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாாரணை நடத்தி வருகின்றனர். கணேஷ்குமார் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சிதம்பரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
சிதம்பரம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆய்வு செய்தார்.
2. கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலையூர் அருகே, பெண்ணை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
4. காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
காசிமேட்டில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்த அதிகாரிகள்: முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் முதல் நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.