மாவட்ட செய்திகள்

திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது + "||" + Pali Larry, a retired teacher on the motorbike in Tiruvarur, collapsed

திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது

திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது
திருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.
திருவாரூர்,

திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து செல்வராஜன் மகன் விஜய் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார், லாரி டிரைவர் அலிவலம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதல்; வாலிபர் பலி
திங்கள்சந்தை அருகே ஸ்கூட்டர்கள் மோதிய விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
2. உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை; மன்னிப்பு கோரிய மாவோயிஸ்டு
உளவு பிரிவின் தவறான தகவலால் ஆசிரியர் படுகொலை நடந்து விட்டது என கூறி மாவோயிஸ்டு மன்னிப்பு கேட்டுள்ளது.
3. முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலி தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய தோழியின் தங்கையை காப்பாற்ற முயன்ற மாணவி, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
4. புலிவலத்தில் நாய்கள் கடித்து புள்ளி மான் பலி தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்
புலிவலத்தில் நாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் ஒன்று பரிதாபமாக இறந்தது.
5. திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.