சென்னை விமான நிலையத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில், விமானங்கள் நிற்கும் நடைமேடை 53 அருகே விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றும் கருவி பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று நின்றது. அந்த கருவியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகைமண்டலம் வந்தது. அதைதொடர்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
உடனடியாக விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த நடைமேடை அருகே விமானம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீ விபத்துக்குள்ளான வாகனம் தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த சம்பவம் பற்றி விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story