பெருங்களத்தூரில் ரெயிலில் அடிபட்டு பள்ளி ஆசிரியர் பலி


பெருங்களத்தூரில் ரெயிலில் அடிபட்டு பள்ளி ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 21 Feb 2019 2:16 AM IST (Updated: 21 Feb 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் சுப்பிரமணி, மாலையில் பள்ளி முடிந்து கூடுவாஞ்சேரியில் இருந்து மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் ரெயில் நிலையம் வந்து இறங்கினார்.

ரெயில் அடிபட்டு பலி

பின்னர் அவர் செல்போனில் பேசியபடியே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. திடீரென அவர், ரெயில் தண்டவாளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் வந்து இறங்கிய அதே மின்சார ரெயில் அவர் மீது மோதியது.

இதில் ஆசிரியர் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், பலியான ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story