பேராசிரியைக்கு வரதட்சனை கொடுமை கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு


பேராசிரியைக்கு வரதட்சனை கொடுமை கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Feb 2019 3:30 AM IST (Updated: 21 Feb 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்தின்போது, ரூ.3 லட்சம் ரொக்கம், 70 பவுன் நகை, 3லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ஆசீர் குடும்பத்தினர் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குளச்சல்,

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் மெகிலின்(வயது 31), தனியார் கல்லூரியில் பேராசிரியை. இவருக்கும் கருங்கல் செல்லங்கோணம் பகுதியை சேர்ந்த ஆசீர் என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, ரூ.3 லட்சம் ரொக்கம், 70 பவுன் நகை, 3லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சீதனமாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் ஆசீர் குடும்பத்தினர் மேலும் ரூ.5 லட்சம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மெகிலின் இரணியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரிந்த கோர்ட்டு ஆசீர் மற்றும் அவரது தாயார் சாலி ரெத்தினாவதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story