காதலியை வெட்டி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு


காதலியை வெட்டி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Feb 2019 3:27 AM IST (Updated: 21 Feb 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

காதலியை வெட்டி கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அம்பர்நாத்,

தானே டோம்பிவிலியில் உள்ள நில்ஜே பகுதியை சேர்ந்தவர் அமர் தேவானந்த் பாட்டீல் (வயது 23). இவரும், சுவப்னாலி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அமர் தேவானந்த் பாட்டீலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த சுவப்னாலி அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை உண்டானது. அப்போது, சுவப்னாலியை அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இதையடுத்து அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு மே 31-ந் தேதி நடந்தது. போலீசார் அமர் தேவானந்த் பாட்டீல் மீது தானே செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, அமர் தேவானந்த் பாட்டீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Next Story