பெரம்பலூர் மாவட்டத்தில் பதாகை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் கலெக்டர் உத்தரவு


பெரம்பலூர் மாவட்டத்தில் பதாகை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 3:41 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பதாகை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.

பெரம்பலூர்,

சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பதாகை, கொடிகம்பங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் முன் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் சாலை ஓரங்களிலோ, தனியார் இடத்திலோ வைக்கக்கூடாது. பதாகைகள் வைப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே படிவம் ஒன்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய தொகை செலுத்தப்பட்ட ரசீதுடன் சமர்ப்பிக்கப்பட்டு என்னுடைய (கலெக்டரின்) அனுமதி பெற வேண்டும்.


கல்வி நிறுவனம், வழிப்பாட்டு தலம், சாலை ஓரம், சந்திப்பு, சிலைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகில் 100 மீட்டருக்கு அப்பாற்பட்டுதான் பதாகை வைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதாகையின் அடியில் என்னுடைய அனுமதி எண், நாள், எத்தனை நாட்களுக்கு செல்லத்தக்கது என்ற விவரம் அச்சிடப்பட வேண்டும். பதாகை வைக்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் விண்ணப்பதாரரே யாருக்கும் அச்சுறுத்தல் விபத்து ஏற்படா வண்ணம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும், அச்சக உரிமையாளர்கள் என்னுடைய அனுமதி கடிதம் இல்லாமல் பேனர் அடித்து கொடுக்க கூடாது. மேற்கூறிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்திட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் பாரதிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் மற்றும் அனைத்து கட்சிப் பிரமுகர்கள், அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story