பரமத்திவேலூரில் ஏலம்: தேங்காய் பருப்பு விலை குறைந்தது
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் அதன் விலை குறைந்தது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு தரத்திற்கு ஏற்றவாறு மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2,385 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.108.12-க்கும், குறைந்த பட்சமாக ரூ.101.69-க்கும், சராசரியாக ரூ.103.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 641-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 828 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.102.79-க்கும், குறைந்த பட்சமாக ரூ.93.29-க்கும், சராசரியாக ரூ.98.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.73 ஆயிரத்து 141-க்கு வர்த்தகம் நடை பெற்றது.
தேங்காய் பருப்பின் வரத்து குறைந்த நிலையிலும் விலை குறைந்துள்ளதாக உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story