அரசு பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா


அரசு பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 8:21 PM GMT)

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விளையாட்டு விழா நேற்று பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதற்கு அந்த கல்லூரியின் முதல்வர் முகேஷ்குமார் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், மாணவர்களுக்கு கூடுதலாக 1,500, 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இன்று ஆண்டு விழா

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகரன் செய்திருந்தார். விளையாட்டு விழாவில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அசோக்ராஜன் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 

Next Story