நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: வாசுதேவநல்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசுதேவநல்லூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசுதேவநல்லூர்,
ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மாடசாமி, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன், விவசாயிகள் சங்க துணை ஒருங்கிணைப்பாளர் மீராக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜபாளையம்-செங்கோட்டை நான்கு வழிச்சாலை திட்டத்தினை கைவிட வேண்டும். விவசாயிகள் மீது பொய் வழக்குபோடுவதை நிறுத்த வேண்டும். போலீசார் மூலம் மிரட்டுவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்களில் ஊன்றப்படும் கற்களை உடனே அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, டாக்டர் சதன்திருமலைக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், நாம் தமிழர் கட்சி இசை மதிவாணன், ராஜகுரு, மனிதநேய மக்கள் கட்சி நயினா முகம்மது, தி.மு.க. வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், போராட்டக்குழு சரவணக்குமார், ஜெயராமன், விவசாயிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story