கோத்தகிரியில் கால்வாயில் விழுந்த காட்டெருமை சாவு
கோத்தகிரியில் கால்வாயில் விழுந்த காட்டெருமை உயிரிழந்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. இந்த நிலையில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலைய வளாகத்துக்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்டெருமை ஒன்று புகுந்தது. அப்போது அங்குள்ள 2 அடி அகல மழைநீர் கால்வாயில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னோக்கி விழுந்ததால் கால்வாயில் இருந்து எழ முடியாமல் காட்டெருமை தவித்தது. உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் மீட்பு பணிக்காக கால்வாயை உடைக்க பொக்லைன் எந்திரத்தை அங்கு கொண்டு வர வழி இல்லை. இதனால் காட்டெருமையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கடப்பாரை மூலம் கால்வாயின் பக்கவாட்டு சுவர்களை வனத்துறையினர் இடித்து காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் உயிருக்கு போராடிய காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடலை கால்நடை டாக்டர் ராஜன் பரிசோதனை செய்தார். தொடர்ந்து அதே பகுதியில் காட்டெருமையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறும்போது, கால்வாயில் தவறி விழுந்து இறந்தது 10 வயதுடைய ஆண் காட்டெருமை ஆகும்.
கால்வாயில் பின்னோக்கி விழுந்துவிட்டதால் எழ முடியாமல் மூச்சுத்திணறி இறந்துவிட்டது என்றன
Related Tags :
Next Story