சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் கிரோபா தோட்டம் பகுதியில் உள்ள ஒரு டிபன் கடையில் சாப்பிட வந்த வாலிபர் ஒருவர், அங்கு வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தந்தையிடம் கூறினார்.இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்த சிறுமியின் தந்தை, எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர், கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகி நகர் 5-வது தெருவில் வசித்து வரும் செல்லக்குட்டி(வயது 21) என்பதும், சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

மேலும் இவர், வேலை இல்லாத நாட்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று எண்ணூரில் உள்ள தனது நண்பர்களை பார்க்க வந்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து மகளிர் போலீசார், செல்லக்குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story