‘தீவிரவாதத்தை ஒழிக்க கல்வியால் மட்டுமே முடியும்’ ஷார்ஜா நாட்டு இளவரசி ஆம்பூரில் பேட்டி


‘தீவிரவாதத்தை ஒழிக்க கல்வியால் மட்டுமே முடியும்’ ஷார்ஜா நாட்டு இளவரசி ஆம்பூரில் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2019 3:15 AM IST (Updated: 23 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

‘கல்வியால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்’ என ஆம்பூர் வந்த ஷார்ஜா நாட்டு இளவரசி கூறினார்.

ஆம்பூர், 

ஐக்கிய அரபு நாடான ஷார்ஜா நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல்குவாஸ்மி வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு நேற்று வந்தார். இங்கு ஆனைக்கார் கல்வி குழுமத்தின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு குழும தலைவர் ஆனைக்கார் ஷபீக்அஹமத் தலைமை தாங்கினார். அறக் கட்டளை செயலாளர் முகம்மது ஆனைக்கார் முன்னிலை வகித்தார். இந்தி யாவின் பசுமை மனிதர் அப்துல்கனி கவுர விருந்தின ராக கலந்து கொண்டார்.

விழாவில் ஆனைக்கார் கல்வி குழுமத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் ஷேக்அப்துல் நாசர், வாத்தி கலீல்அஹமத், முஹபுனிசா, நசிமாபேகம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஷார்ஜா நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல்குவாஸ்மி வழங்கினார்.

அப்போது அவர் பேசுகை யில், “ஆண்கள் மற்றும் பெண்களின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வளர்ச்சி பெற்றவர்கள், வளர வேண்டியவர்களை கைதூக்கி விட வேண்டும். 40 வருடங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாடு, மிகவும் ஏழைநாடாகத்தான் இருந்தது. தற்போது பணக்கார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு நிச்சயமாக எண்ணெய் வளம் காரணம் இல்லை. கல்வி மட்டுமே காரணமாக இருந்துள்ளது.

குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதே சந்ததி களின் வளர்ச்சிக்கு ஒரே வழி. தாய்மார்களை கண்டு நான் பெருமை அடைகிறேன். பெண் குழந்தைகளின் கல்விக்கு துணை நிற்கும் நிலைப்பாட்டை வரவேற் கிறேன்” என்றார்.

விழாவில் ஆனைக்கார் கல்வி குழுமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து ஷார்ஜா நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல்குவாஸ்மி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நான் சென்று வந்துள்ளேன். எனினும் அந்த நாடுகளைவிட இந்தியாவிற்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மிகவும் சிறந்த நாடாகும்.

கடவுளுக்கு பயப்படுகிறவர் கள் எவரையும் கொல்லமாட் டார்கள். முட்டாள்கள்தான் தீவிரவாதிகளாக இருப்பார் கள். ஒரேயொரு புத்தகத்தை மட்டுமே படித்துவிட்டு ஒரே யொரு கருத்தை மட்டுமே அறிந்து கொண்டு மற்றவற்றை படித்து யோசிக்காத முட்டாள் கள்தான், தீவிரவாதிகளாக மாறுகின்றனர். தீவிரவாதம் ஒரு நாட்டை முன்னோக்கி அழைத்து செல்லாமல், பின்னோக்கி அழைத்து செல்கிறது. தீவிரவாதிகள் பல்வேறு விஷயங்கள் சம்பந்த மான கல்வியை கற்பதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டுமானால் கல்வி அறிவை புகட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும். கல்வியால்தான் தீவிரவா தத்தை ஒழிக்க முடியும்.

நல்ல மனிதன் எந்த காரணமும் இல்லாமல் எவரையும் கொல்லமாட் டான். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அல்லது யூதர் என ஆகிய எந்த மதத்தவராக இருந்தாலும் இதயம் உள்ளவர் கள் எவரையும் கொல்ல மாட்டார்கள். ஷார்ஜா நாடு பெண்கள் பாதுகாப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியா விலும் அதேபோல் பெண் களுக்கு பாதுகாப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story