திருவோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு


திருவோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தாய், மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

ஒரத்தநாடு, 

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சிவவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது65). இவருடைய குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரெங்கம்மாளின் குடும்பத்தினருக்கும் பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரம் அடைந்த ரெங்கம்மாள் மற்றும் அவருடைய மகன்கள் 2 பேர் கோவிந்தராசுவின் மகள்கள் ஜெயலட்சுமி (37), போதும்மணி (27), பவானி (25) ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி, போதும்மணி, பவானி ஆகிய 3 பேரையும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெங்கம்மாள், அவருடைய மகன்கள் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story