ஸ்ரீபெரும்புதூர் அருகே மருத்துவ கல்லூரி விடுதியில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அருகே மருத்துவ கல்லூரி விடுதியில் தீ விபத்து
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கல்லூரி மாணவர் தங்கும் 8 அடுக்கு மாடி கொண்ட விடுதி உள்ளது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு இந்த விடுதியின் 4-வது தளத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென தீ பிடித்து புகைமூட்டம் மாணவர்கள் தங்கும் அறைக்கு பரவியது. தீப்பிடித்து எரிவதை உணர்ந்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு அடுக்கு மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஓரகடம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை 2 மணிநேரம் போராடி அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக 4-வது மாடியில் 9 அறைகள் அடுத்தடுத்து எரிந்து சாம்பலானது. தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட 10 மாணவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த பயங்கர தீ விபத்தில் விடுதி அறைகளில் தங்கிய மாணவர்களுடைய உடைமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story