பதிவு எண் பெறப்படாத விதைகள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை இயக்குனர் எச்சரிக்கை
பதிவு எண் பெறப்படாத விதைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு இயக்குனர் பத்மாவதி தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் என விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். இப்பயிர்களுக்கான விதைகள் அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.
விதை சான்றளிப்பு துறையால் சான்று செய்யப்பட்ட விதைகள் மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களின் உண்மை நிலை விதைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விற்பனையை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களின் வீரிய ஒட்டு மற்றும் ரக விதைகளை தற்போது விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை கோவையில் அதற்குண்டான படிவத்தில் அதன் குணாதிசியங்களை குறிப்பிட்டு பதிவு எண் பெறப்பட வேண்டும்.
இவ்வாறு பதிவு எண் பெறப்பட்ட ரகங்களையே வருகிற 1-ந் தேதி முதல் விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தனியார் வீரிய ஒட்டு விதைகள் மற்றும் ரகங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பதிவு எண் பெறப்பட வேண்டும். இவ்வாறு பதிவு எண் பெறப்படாத விதைகளை விற்பவர் மீது விதை கட்டுப்பாட்டு ஆணையின்படி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை விதை ஆய்வு இயக்குனர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story