பரமத்தி வேலூரில் ஏலம்: பூக்கள் விலை உயர்ந்தது


பரமத்தி வேலூரில் ஏலம்: பூக்கள் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 24 Feb 2019 3:45 AM IST (Updated: 24 Feb 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் நேற்று நடந்த ஏலத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர், 

பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.200-க்கும், பெங்களூரு மல்லி கிலோ ரூ.200-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.70-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ஒன்று ரூ.120-க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.350-க்கும், பெங்களூரு மல்லி கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும் ஏலம் போனது.

பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story