கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கோவி ந்தஅக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 24). டிரைவர். இவரது மனைவி சுமித்ரா(21). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஹரிசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஹரிஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்செட்டி அருகே உள்ள ஏழுமலையான்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(37). தொழிலாளி. இவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து அவரது தாயார் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சரவணன், மத்திகிரியில் அபிராமி கார்டன் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் காடப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (42). இவருடைய மனைவி பச்சியம்மா. இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட
தகராறில் பச்சியம்மா கோபித்து கொண்டு சூளகிரி அடுத்த கீழ்மொரசுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முருகேசன் அங்கு சென்று மனைவியை தன்னுடன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு பச்சியம்மா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகேசன், கீழ்மொரசுப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story