தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல்
பல கடைகளில் இருந்து 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல கடைகளில் இருந்து 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வில் துணை சுகாதார இயக்குனர் குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் தர்மலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அருள்பிரியன், ராமமூர்த்தி மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இதேபோல் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் திருநாவுகரசு, செல்வகாந்தி, பிரவீன்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

Related Tags :
Next Story