முதுமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ மரங்கள் எரிந்து நாசம்
முதுமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது.இதில் மரங்கள் எரிந்து நாசமானது.
மசினகுடி,
நீலகிரியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி-தெப்பக்காடு சாலையோரத்தில் காட்டுத்தீ பிடித்தது. சிறிது நேரத்தில் மள மளவென அடுத்தடுத்த வனப்பகுதிகளில் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் மசினகுடி-தெப்பக்காடு சாலையில் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று காட்டுத்தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் பலத்த காற்று வீசியதால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து கார்குடி வனச்சரகர் சிவக்குமார், முதுமலை வனச்சரகர் தயாநந்தன், சிங்காரா வனச்சரகர் காந்தன், சீகூர் வனச்சரகர் செல்வம் ஆகியோர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தற்காலிக தீத்தடுப்பு பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கபட்டனர். அனைவரும் குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் தீயின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.
இதற்கிடையில் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு பணி நடந்தது. ஆனால் அதுவும் ஓரளவே கை கொடுத்தது. மண்டியார் வனப்பகுதியிலும் கொழுந்துவிட்டு எரிந்த தீ, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் பின்புறமுள்ள வனப்பகுதிக்கும் பரவி யது. இதனால் வனத்துறையினர் செய்வது அறியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த பயங்கர காட்டுத்தீயில் மரம், செடி, கொடி, புற்கள் போன்றவை நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் எரிந்து நாசமாகின. மேலும் ஏராளமான சிறு உயிரினங்கள் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் முதுமலையை ஒட்டியுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் கக்கநல்லா- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story