வக்கீல்களுக்கு சுவாசத்தை போல் வாசிப்பு பழக்கம் முக்கியம்: பயிற்சி வகுப்பில் திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி அறிவுரை
வக்கீல்களுக்கு சுவாசத்தை போல் வாசிப்பு பழக்கம் முக்கியம் என்று திருப்பூரில் நடந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் கூறினார்.
திருப்பூர்,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கான 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இதற்கான தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஐகோர்ட்டு உத்தரவுப்படி, திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி வழிகாட்டுதலின் பேரில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. எதை நாம் செய்தாலும் அதில் அக்கறை, சிரத்தை எடுத்துக்கொண்டால், அதற்காக தயாரானால் வெற்றி நம்மை தேடி வரும். அரசியல் உரிமை, தனி மனித உரிமை, சமூக விடுதலை, கருத்துரிமையை பெற்றுத்தந்தவர்கள் வக்கீல்கள். ஒரு விஷயத்தை நுணுக்கமாக படிக்கின்ற ஆற்றல் சட்டம் படித்தவர்களால் தான் முடியும். வக்கீல்கள் சட்டத்தை மட்டும் படித்தால் வெற்றி பெற முடியாது. சமயோஜித புத்தி உள்ளவர்களால் தான் சிறப்படைய முடியும். ஒரு பிரச்சினையை எந்த அடிப்படையில் அணுகுகிறோம் என்பது தான் முக்கியம். இந்த நாட்டில் பள்ளி, கல்லூரியை முடித்தவர்கள் அதன்பிறகு வாசிக்கும் பழக்கத்தை விட்டு விடுகிறார்கள்.
தான் மட்டும் வெற்றி பெறுபவன் தலைவன் அல்ல. தன்னை தேடி வருபவனை வெற்றி பெற செய்பவனே தலைவன். தன்னை தேடி வந்து வழக்கு கொடுப்பவனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உழைப்பவன் தலைவன். தன்னுடைய இளம் வக்கீல்களுக்கும் சேர்த்து உழைப்பவனே தலைவன். அதனால் வக்கீல்கள் ஒவ்வொருவரும் தலைவர் தான்.
வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு வக்கீலுக்கும் இருப்பதுடன் கற்றுக்கொள்கிற ஆர்வம் இருக்க வேண்டும். உங்களுக்கு பெரியவர்கள் சொல்லித்தருகிறார்கள். நீங்கள் ஏற்கனவே படித்த விஷயத்தை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறார்கள். யாரும் கற்றுக்கொடுக்க முடியாது. படிக்க வேண்டும் என்பது நமக்கு உள்ளே இருந்து உருவாக வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்கள் இருந்தால் தான் ஆசிரியர் தோன்றுவார். நமக்கு கேட்க வேண்டிய ஆர்வம் இருக்கும்போது தான் நமது காதுகள் கூட கேட்கும். தினமும் நாம் ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் வக்கீல்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள வேண்டும். நேற்றை விட இன்று நம்மை புதிதாக உருவாக வேண்டும். சட்டம் ஒன்று தான் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. கேட்க தயாராக இருந்தால் சொல்லிக்கொடுப்பதற்கு மூத்தவர்கள் தயாராக உள்ளனர்.
புத்தகத்தில் இருக்கும் வரிகளை பிளந்து பிளந்து படிப்பவர் தான் வக்கீல்கள். மற்றவர்கள் வரிகளை வாசிப்பார்கள். வரிகளுக்குள் சென்று படிப்பவர் தான் வக்கீல்கள். வக்கீல்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்பவன் தான் வெற்றி பெறுவான். அனைத்து காலத்திலும் பிரச்சினைகள் இருக் கும். பிரச்சினைகளை தீர்வு காண்பவர்தான் வக்கீல்கள். பிரச்சினைகளை உள்வாங்குபவர்களாக இருக்கக்கூடாது. மூத்த வக்கீல்கள் எவ்வாறு வழக்குகளை நடத்துகிறார்கள் என்பதை அறிய வேண்டும். மூத்த வக்கீல்கள் கடந்து வந்த பாதையை இளம் வக்கீல்கள் அறிய வேண்டும்.
பொறுத்தார் பூமியாழ்வார்கள் என்ற நிலை வக்கீல்களுக்கு பொருந்தும். காத்திருப்பவர்களே வெற்றி பெற முடியும் என்று வக்கீல் தொழில் கற்றுக்கொடுத்து வருகிறது. அந்த காலத்தில் நாம் தொடர்ந்து படிக்க வேண்டும். தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளக்கூடிய தன்மையும் வக்கீலுக்கு வர வேண்டும். தப்பை திருத்திக்கொள்கிறேன் என்ற மனநிலையை பெற வேண்டும். பிரச்சினைகள் வரும்போது அவற்றை விட்டு விட்டு செல்ல வேண்டும். மனதில் ஏற்றி வைக்கக்கூடாது. ஏனென்றால் மற்றவர்கள் பிரச்சினைகளை சுமப்பது வக்கீலின் வேலை.
உலகில் வெற்றி பெற்றவர்களின் தாரகமந்திரம் தோற்றப்பொலிவு தான். வெற்றியும், மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும் உலகம் முழுவதும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. யார் வெற்றியை நாடுகிறாரோ அவருக்கு வெற்றி கிடைக்கிறது. தோல்வியை பற்றி நினைக்கிறவன் தோல்வியடைகிறான். பிரச்சினையை பற்றி சிந்திக்காமல் பிரச்சினைக்கான தீர்வை காண வேண்டும். தீர்வை நோக்கி நகர்வதற்கான வழியை யார் சரியாக சட்டப்படி சொல்லி தீர்வு காண்கிறார்களோ அவர்களே வக்கீல்கள்.
வக்கீல்களுக்கு சுவாசத்தை போல் வாசிப்பு பழக்கம் முக்கியம். வக்கீல்களின் வீடுகளில் ஒரு அலமாரியில் சட்ட புத்தகம் இருக்க வேண்டும். திருக்குறள், தமிழ் புத்தகங்களையும் கண்டிப்பாக படிக்க வேண்டும். யாரிடம் இருக்கிறதோ அவருக்கு அதிகம் கொடுக்கப்படும் என்றும், இல்லாதவருக்கு இருப்பதும் பறிக்கப்படும் என்றும் பைபிள் கூறுகிறது. யாரிடம் நன்றி உணர்வு இருக்கிறதோ அவர்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். யாரிடம் நன்றி உணர்வு இல்லையோ அவர்களிடம் பறிக்கப்படும். இதனால் இந்த வகுப்பு நடத்த உதவிய ஐகோர்ட்டுக்கும், மாவட்ட முதன்மை நீதிபதிக்கும், நமக்கு பயிற்சி வகுப்பு நடத்த வந்த மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவிப்போம். வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும்.
வக்கீல்கள் மட்டும் தான் சமுதாயத்தில் நம்பிக்கையை தர முடியும். பலமில்லாதவர்கள், தனது வார்த்தைக்கு செல்வாக்கு இல்லாதவர் தான் வக்கீல்களின் கதவை தட்டுகிறார்கள். எனது வழக்கு சுத்தமானது. என்னிடம் வழக்கை கொடுத்தவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கோவை மூத்த வக்கீல் சஞ்சயன், திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி, மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ரவி, மூத்த வக்கீல் பாலகுமார், அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். இந்த பயிற்சி வகுப்பில் வக்கீல் தொழில் தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் இருக்கும் இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர். பின்னர் தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடந்தது. சாட்சிய சட்டத்தின் அடிப்படை உரிமைகள், குற்றவியல் வழக்குகளில் சாட்சி விசாரணை என்ற தலைப்புகளில் மூத்த வக் கீல் சஞ்சயன் பயிற்சி வகுப்பு நடத்தினார். சிவில் வழக்கு கள் குறித்த சாட்சி விசாரணை தொடர்பாக திருப்பூர் மூத்த வக்கீல் சத்தியநாராயணன் பேசினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைநிலை மனுக்கள் சாட்சி விசாரணை தொடர்பாக மூத்த வக்கீல் லட்சுமணன், குற்றவியல் வழக்கு விசாரணை தொடர்பாக வக்கீல் ரவி ஆகியோர் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள்.

Related Tags :
Next Story