பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
கோவில்பட்டி,
நெல்லை-விருதுநகர் மாவட்ட எல்லையோர பகுதியில் வெம்பக்கோட்டை அருகே வரகனூரில் அய்யாச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இருந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் தொழிலாளர்கள் சாப்பிட சென்றபோது, திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கினர். இதில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த நீதிராஜ் (வயது 50), வரகனூரைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி கிருஷ்ணம்மாள் (55), மாரியம்மாள் (48), ஏழாயிரம்பண்ணை மேல சத்திரத்தைச் சேர்ந்த ஜெயக்கண்ணன் மனைவி கஸ்தூரி (45) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருத்தங்கலைச் சேர்ந்த தொழிலாளி பெரியசாமி (46), ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த தமிழ்மாலை மனைவி கருப்பாயி (54) உள்ளிட்ட 11 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மற்றும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெரியசாமி நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த வெடி விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story