காதல் தோல்வியால் விபரீத முடிவு தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை


காதல் தோல்வியால் விபரீத முடிவு தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2019 4:20 AM IST (Updated: 25 Feb 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் காதல் தோல்வியால் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்து உருக்கமான கடிதம் சிக்கியது.

ஈரோடு,

ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மேம்பாலத்துக்கு அருகில் செல்லும் தண்டவாள பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் விசாரணையில் அந்த வழியாக ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்த வாலிபர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததா கவும், அந்த பெண்ணுக்கு துரோகம் செய்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அடுத்த ஜென்மத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தையாக பிறப்பதாகவும், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கடிதத்தை கைப்பற்றி இறந்த வாலிபரின் விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story