தேசிய மாணவர் படைக்கான சான்றிதழ் தேர்வு
தேசிய மாணவர் படை சார்பில் சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மற்றும் உமையாள் ராமநாதன் கல்லூரியில் 2 நாட்கள் தேசிய மாணவர் படை சார்பில் சி பிரிவிற்கான சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த தேர்வை தேசிய மாணவர் படை 34 தமிழ்நாடு பட்டாலியன் தஞ்சாவூர் கர்னல் ஷகீப்ராய், திருச்சி தமிழ்நாடு பட்டாலியன் லெப்டினல் கர்னல் சுனில்பிள்ளை, திருச்சி மண்டல குரூப் கமாண்டர் கர்னல் சிவநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் 2018–19ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையில் சிறந்த அதிகாரியாக காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரி கவிப்பிரியா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிறந்த தேசிய மாணவர் படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட கவிப்பிரியாவை கமாண்டிங் ஆபிசர் கர்னல் அஜய்ஜோசி, லெப்டினல் கர்னல் கே.ஆர்.ரெட்டி, அழகப்பா கல்விக்குழுமத்தின் தலைவர் ராமநாதன் வைரவன், செயலாளர் உமையாள்ஆச்சி, டிரஸ்டி தேவி வைரவன், மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியர் குமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.