நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 25 Feb 2019 4:44 AM IST (Updated: 25 Feb 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடிக்கு சென்ற அரசு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிஅடைந்தனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை வரை சென்று சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.

அதுபோல் இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனுஷ்கோடி சென்றுவர வசதியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் இருந்து ½ மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பஸ் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலும் பழயை பஸ்களே இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த பழைய பஸ்கள் அடிக்கடி பழுது அடைந்து நடுவழியில் நிற்கின்றன. நேற்று தனுஷ்கோடி சென்ற அரசு பஸ் ஒன்று பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் மாற்று பஸ்சுக்காக காத்துக்கிடந்தனர். இதனால் கடும் அவதி அடைந்தனர்.

எனவே ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பகுதிக்கு தரமான நல்ல பஸ்களை உடனடியாக இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story