கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2019 5:27 AM IST (Updated: 25 Feb 2019 1:47 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. தலைமையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இது வெற்றிக்கூட்டணியாக அமையும். பா.ஜ.க.–பா.ம.க. ஆகிய கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. மேலும் மக்கள் நலனை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் யார்–யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று படிப்படியாக அறிவிக்கப்படும். தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.

அந்த காலம் முதல் இன்று வரை டி.டி.வி. தினகரன், சொல்வது எதுவும் நடைபெறவில்லை. சமீபத்தில் கூட அவர் ஒரு கருத்து கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமரையே தீர்மானிக்கக்கூடிய சக்தியாக அ.ம.மு.க. இருக்கும் என்று. இது மிகப்பெரிய வேடிக்கையாக இருக்கிறது. இதிலிருந்து அவருடைய அரசியல் வெளிப்படைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இனிப்பு வழங்கினார்.


Next Story