பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மனிதசங்கிலி போராட்டம்
பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மனிதசங்கிலி போராட்டம் நடத்த இருப்பதாக கடலூரில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறினார்.
கடலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
28 ஆண்டு சட்ட போராட்டம் நடத்திய பிறகு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இதன் பின்னர் தமிழக அமைச்சரவை கூடி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக கவர்னருக்கு கோப்பை அனுப்பி வைத்தது. அடுத்த மாதம்(மார்ச்) 9-ந் தேதி வந்தால் 6 மாதம் நிறைவடையும் நிலையில் 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்பில் கவர்னர் ஏன்? கையெழுத்து போடவில்லை என்று தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறேன்.
பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி அடுத்த மாதம் 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய 7 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். 7 பேரையும் கவர்னர் விடுதலை செய்வதாக அறிவித்தால் நான் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அற்புதம்மாள் பேசினார். இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மாவட்ட பொறுப்பாளர் சாமி ரவி, அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், வக்கீல் திருமார்பன், எஸ்.என்.கே.ரவி, மருதவாணன் மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story