தேனி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு
தேனி அருகே வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது.
தேனி,
தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். பின்னர் இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பாம்பை பிடித்தார். அது, 7 அடி நீளம் கொண்டது. பாம்பை பிடித்த கண்ணன், அதை நேற்று காலை தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலையடிவார பகுதிக்கு கொண்டு சென்று விட முயன்றார்.
மலையடிவாரத்தில் விட்டபோது அந்த பாம்பு குட்டிகளை போட்டுள்ளது. ஒரேநேரத்தில் 50-க்கும் மேற்பட்ட குட்டிகளை அந்த பாம்பு ஈன்றது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டார். வீட்டுக்குள் புகுந்த பாம்பை வீட்டில் இருந்தவர்கள், பார்க்காமல் இருந்து இருந்தால் அங்கேயே குட்டிகளை ஈன்றிருக்கும். சரியான நேரத்தில் பிடித்து மலையடிவாரப் பகுதியில் விடப்பட்டதால் குட்டிகள் மலையடிவார பகுதியில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story