தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம்


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காவிட்டால் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி,

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடத்த மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

இதற்காக மேல்முறையீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில், மேல்முறையீடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் மேல் முறையீடு செய்தவர்கள் 15 பேர் கலந்துகொண்டனர்.

விசாரணையை தொடர்ந்து அரசின் பல்வேறு துறை அலுவலக பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கலந்துகொண்டு பேசினார். இந்த விசாரணை மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தை தொடர்ந்து பிரதாப்குமார் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் அளிக் கப்படாத 15 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக வந்தேன். கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றில் பதில் அளிக் கப்படாத மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

பொதுமக்கள் அரசிடம் இருந்து தேவையான தகவல் களை பெறுவதற்காக உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. அவ்வாறு இல்லாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலரை பணி நீக்கம் செய்யவும் துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யும் அதிகாரமும் தகவல் ஆணையருக்கு உள்ளது. எனவே, அரசு துறை அலுவலர்கள் இச்சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story